என்ன நடந்தது? சுசித்ரா கணவர் கார்த்திக் விளக்கம்!

Actor Karthik and suchithra chennai
மூன்று தினங்களுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவில் பல டுவிட்டுகளை பதிவு செய்தார். அதில் தனுஷ், சிம்பு , சுசித்ரா மூவரும் எங்கேயோ ஒன்றாக இருந்தது போல், சத்குரு, ஈஷா பவுண்டேசன், சிவராத்திரி பிரார்த்தனை தொடர்பாக ஏதோ நடக்க, அது குறித்தான பதிவுகள் போல் இருந்தன.

தனுஷ் கடவுள் என்றும், சிம்பு வின்னர் சம்போ என்றும் ட்வீட் செய்துள்ளார் சுசி. தன்னிலை மறந்து இந்த ட்வீட்டுகளை போடும்போது, உங்க அக்கவுண்ட் ஹேக் பண்ணப்பட்டுள்ளதான்னு கேட்டவர்களுக்கு, இல்லை என்று பதில் சொல்லுகிறார்.

தனுஷின் ஆட்கள் அந்த விளையாட்டில் சுசித்திரா கையை பிடிச்சி இழுத்து, அவரின் கையில் ரத்தம் கட்டிப்போகும் அளவுக்கு கை இருக்கிறது. அதையும் ஸ்டில் போட்டுள்ளார். தனுஷ் வேடிக்கை பார்க்க அவர் க்ரூப் கையை இழுக்க, சிம்புவும் அங்கு இருந்திருக்கிறார். தனுஷ் வேறு உதவி செய்யாதீங்கன்னு சொன்னாருன்னும் ட்வீட் பண்ணி இருக்கார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் பத்தியும் ட்வீட் பண்ணி உள்ளார்.சௌந்தர்யா இப்போது தனுஷை ஹீரோவாக்கி வேலை இல்லா பட்டதாரி 2 ம் பாகத்தை இயக்கி கொண்டு உள்ளார். அது பற்றி, ‘ஏற்கனவே தான் ஒரு பொம்மை படத்தை உங்க இயக்கத்தின் திறமையில் பார்த்துட்டோமே, இப்போ எதுக்கு (விஐபி-2) இன்னொரு டார்ச்சர் செய்ய வேண்டும்?’ என்று கேட்டுள்ளார்.

தன் கணவர் கார்த்திக்கை சுசித்திரா விவாகரத்து செய்யப்போவதாகவும், அதை தனுஷ் ஆட்கள் கிண்டல் செய்துகொள்ளலாம் என்று ட்வீட் செய்துள்ளார்.

இவ்வளவும் இப்போது சுசித்ராவின் கணவர் கார்த்திக்கினால் மறுக்கப்பட்டுள்ளது. சுசித்ராவின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதால், இது போல பதிவுகள் வந்தன. இப்போது கணக்கு திரும்ப மீது எடுக்கப்பட்டு விட்டது. சுசித்ரா பதிவு செய்த பதிவுகள் மனவேதனையை சிலருக்கு கொடுத்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *