நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – நடந்தது என்ன?

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் குஜராத்தில் மாநில தலைநகரான அகமதாபாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று பின்னிரவு துபாய் நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பச்சை சிக்னல் கொடுத்ததும், ஓடுபாதையில் முழு வேகமெடுத்து உயர கிளப்புவதற்காக விமானி முயற்சி செய்தார்.

அப்போது, அதே ஓடுபாதையில் ஏர் இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு விமானமும் நிற்பதை கண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பதற்றமும் பீதியும் அடைந்தனர். உடனடியாக ஜெட் ஏர்வேஸ் விமானியை தொடர்புகொண்டு இதுபற்றி எச்சரித்தனர்.

சுதாரித்துக் கொண்ட விமானியும் திடீரென்று அவசர பிரேக்கை இயக்கி விமானத்தை உடனடியாக நிறுத்தினார். இதனால், அங்கு நின்று கொண்டிருந்த ஏர் இண்டிகோ விமானத்தின் மீது ஜெட் ஏர்வேஸ் விமானம் பயங்கரமாக மோதவிருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

அப்படி ஒரு அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் இரு விமானங்களும் வெடித்து சிதறி, துபாய் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் பலியாகி இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *