வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று இரண்டாவது நாளாக உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் ஓரமாக உணவுதவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தாயகப் பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

உணவுதவிர்ப்பு போராட்டமானது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்இ பங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த உணவுதவிர்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கந்தசாமி கோவிலில் பூஜை வழிபாடுகளை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுமார் 10பேருடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிக் சிலரும் இணைந்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் இந்த போராட்டத்தை ஆரம்பித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *