குடும்பத்தில் மூவருக்கு ஒரே ராசி இருந்தால் என்ன பரிகாரம்…

ஜோதிடம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அதற்கான பரிகாரம் பற்றியும் பார்க்கலாம்.

  • குடும்பத்தில் மூவருக்கு ஒரே ராசி இருந்தால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான திசையில் நடக்கும் போது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படலாம்.
  • 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.
  • ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் கடலோரமாக உள்ள சம்ஹார ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம்.
  • ஏக ராசிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது.
  • மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
  • ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது ஒரே வண்டியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply