பிரித்தானியாவில் நீண்ட நேரமாக ரயில் வராததால் ரயில் பாதையில் இறங்கிய பயணிகள்

பிரித்தானியா

நீண்ட நேரமாக ரயில் வராததால் பொறுமையிழந்த பயணிகள் ரயில் பாதையில் குதித்து நடந்தே வீடு திரும்பும் முயற்சியில் ஈடு பட்ட சம்பவம் பிரித்தானியாவில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

வழக்கத்தை விட முன்னதாகவே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் வெகு நேரம் காத்திருந்து பொறுமையிழந்த பயணி ஒருவர் ரயிலை நிறுத்துவதற்கு உதவும் அவசர கால அலாரத்தை அழுத்திவிட்டு ரயில் பாதையில் குதித்து நடக்கத் தொடங்கினார்.

அவரை பின் பற்றி பல பயணிகள் நடக்கத் தொடங்கியதை அடுத்து பெருங்குழப்பம் ஏற்பட்டது.

ரயில் பயணிகள் ரயில் பாதையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று நடந்த சம்பவத்தைக் கண் முன்னே காட்டுகிறது.

ரயிலிலிருந்த ரயில் பயணிகள் சிலரும் ரயிலை விட்டிறங்கி ரயில் பாதையில் நடக்கத் தொடங்கியதும் உஷாரான ரயில்வே நிர்வாகம், பொலிசாரை வரவழைத்தது.

பொலிசார் வந்து ரயில் பாதையில் இறங்கி நடந்தவர்களை அப்புறப்படுத்திய சிறிது நேரத்தில் ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. ரயில்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், சரியான கழிவறை வசதி இல்லாததாலும் மக்கள் டுவிட்டரில் ரயில்வே நிர்வாகத்தை கண்ட மேனிக்கு திட்டித் தீர்த்தனர்.

Leave a Reply