என்ன நடக்கிறது பிரித்தானியாவில்: வானிலை குறித்த சில தகவல்கள்

பிரித்தானியா

பிரித்தானியாவை திக்கு முக்காடச் செய்த எம்மா புயல் ஓய்ந்து பனி பெய்வது குறைந்திருந்தாலும் இன்னும் சில பிரச்சினைகள் உள்ளதாக சுற்றுச்சூழல் ஏஜன்சி தெரிவித்துள்ளது.

வெப்பநிலை சற்று உயர்ந்துள்ளது எனினும் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியாவில் 50க்கும்மேற்பட்ட இடங்களுக்கு வெள்ள அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடப்பட்டுள்ள 51 வெள்ள அபாய எச்சரிக்கைகளில் 15 ”பெரு வெள்ளம் எதிர்பார்க்கப்படுகிறது, உடனடி நடவடிக்கை தேவை” என்று எச்சரிப்பவை. மீதி 36 எச்சரிக்கைகள் ”பெரு வெள்ளம் வரும் வாய்ப்புள்ளது, தயார் நிலையில் இருக்கவும்” என்று எச்சரிப்பவை.

லண்டனுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அது தேம்ஸ் நதியோரம் உள்ள Putney Bridge முதல் Teddington Weir வரைக்குமான பெரு வெள்ள எச்சரிக்கை.

அயர்லாந்து இன்னும் சிவப்பு எச்சரிக்கையின்கீழ்தான் உள்ளது.

 

புயல் ஓய்ந்தாலும் அதன் பாதிப்புகள் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்தைப் பொருத்தவரை சாலைகளில் இன்னும்சாதகமான சூழ்நிலைகள் உருவாகவில்லை என்றே தெரியவந்துள்ளது.

Leave a Reply