லண்டனில் குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சியளித்த நபர் கைது

பிரித்தானியா

லண்டனில் உள்ள மதராசாவில் குழந்தைகளுக்கு தீவிரவாதம் தொடர்பாக பயிற்சியளித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உமர் அகமது ஹகியூ என்ற அந்த நபர் கிழக்கு லண்டனில் உள்ள மதராசாவில் குழந்தைகளுக்கு தீவிரவாத பயிற்சி தொடர்பாகவும், பிடிபடும் நபர்களை கொலை செய்வது எவ்வாறு என்பது தொடர்பான வீடியோக்களையும் காண்பித்ததாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து உமரை கைது செய்த லண்டன் போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தி தீவிரவாத பயிற்சிகள் தொடர்பான புத்தகங்களை பறிமுதல் செய்தனர். இவருக்கு உதவியதாக மேலும் இருவரை கைது செய்த போலீசார், Old Bailey நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave a Reply