விமானத்தில் உடைகளை கழட்டிவிட்டு ஆபாச படம் பார்த்த பயணியால் பரபரப்பு

உலகம்

மலேசியாவிலிருந்து வங்கதேசம் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த பயணி தனது உடைகளை கழட்டி ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கதேசத்தை சேர்ந்த 20-களில் உள்ள இளைஞர் ஒருவர் மலேசியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இந்நிலையில் கோலாலம்பூரிலிருந்து வங்கதேசத்தின் டாக்காவுக்கு செல்லும் விமானத்தில் இளைஞர் பயணித்துள்ளார்.

விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே தனது உடைகளை கழட்டி நிர்வாணமாக இருந்த இளைஞர் தனது லேப்டாப்பில் ஆபாச படங்களை பார்த்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், ஆடைகளை உடுத்த சொன்ன நிலையில் உடைகளை உடுத்தியுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்த பெண்களை கட்டிபிடிக்க முயன்ற நிலையில் பணிப்பெண்கள் தடுத்துள்ளனர்.

இதையடுத்து கோபமடைந்த இளைஞர் அவர்களை தாக்கியுள்ளார், அதன் பின்னர் குறித்த இளைஞரின் கையை விமான ஊழியர்கள் கட்டி வைத்தனர்.

அதே நிலையில் விமானம் டாக்காவுக்கு வந்த நிலையில் இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இளைஞரின் இந்த மோசமான செயல் சக பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Reply