லண்டனில் தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் 20,000 வீடுகள்: காரணம் என்ன?

பிரித்தானியா, முக்கிய செய்திகள்

லண்டனில் பனிப்பொழிவு வானிலை, வடிகட்டிய நீர்த்தேக்கம் போன்ற பிரச்சனையால் 20,000-க்கும் அதிகமான வீடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பிரபல தண்ணீர் நிறுவனமான Thames Water தெரிவிக்கையில், முன்னெப்போதும் இல்லாத அளவு தண்ணீர் தேவை உள்ளதை இங்கு காண முடிகிறது.

இதற்கு மலைகளின் வெடிப்பு, கசிவுகள் மற்றும் வடிகட்டிய நீர்த்தேக்கம் போன்றவையும் காரணமாகும்.

மக்கள் முடிந்தவரை தண்ணீரை குறைவாகவும், தேவையான விடயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் படி கேட்டு கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் ஞாயிறு இரவு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 12000-மாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல பல கடைகளில் தண்ணீர் பற்றாக்குறையால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் டுவிட்டரில் தங்களின் பிரச்சனைகளை கூறி வருவதுடன், அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கூறியுள்ளனர்.

Leave a Reply