தனுசு ராசிக்குள் நுழையும் வீர நாயகன் செவ்வாய் – 12 ராசிக்கும் பலன்கள்

ஜோதிடம்

மாதம் எந்த ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கும்? செவ்வாய் பகவான் தனது நண்பன் தனுசு வீட்டில் பகையாளி சனியுடன் இன்று முதல் குடித்தனம் செய்யப் போகிறார். 12 ராசிகளில் தனுசு 9வது இடத்தில் உள்ளது. குருபகவான் ஆட்சிநாதனை கொண்ட தனுசு நெருப்பு ராசி. இந்த நெருப்பு கிரகமான செவ்வாய் பகவான் அமரப்போகிறார்.

ஏற்கனவே தனுசு ராசியில் சனிபகவான் குடித்தனம் செய்து வருகிறார். தனுசு ராசி செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும், சனிக்கு பகை வீடு. செவ்வாயும், சனியும் யுத்த கிரகங்கள் இரண்டும் இணைந்து சில மாதங்கள் குடித்தனம் செய்யப்போவதால் நாட்டில் என்ன மாற்றங்கள் நிகழும், 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் என்ன என்று பார்க்கலாம்.

மேஷம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் இப்போது ராசிக்கு 9வது வீட்டில் சனியோடு அமர்ந்துள்ளார். உங்கள் வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் இன்று முதல் வலுவடையும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. சொந்த தொழிலில் பெரிய அளவில் லாபம் இருக்காது. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். செவ்வாய் கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

ரிஷபம்

வீரத்தின் நாயகன் செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். எதிலும் திருப்தி இருக்காது. அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. சின்னச் சின்ன காயங்கள் ஏற்படும் என்பதால் கவனம் அதிகம் தேவை. பணத்தை கவனமாக கையாளுங்கள். கையில் உள்ள பணத்தை இழந்து விட்டால் அதிக மன அழுத்தம் ஏற்படும். முருகப்பெருமானை வணங்கவும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் அமர்ந்திருக்கிறார் செவ்வாய். மனைவியிடம் வாயைக் கொடுக்காதீர்கள். மனைவியுடன் சண்டை வரலாம். வயிற்று உபாதைகளுக்கு வாய்ப்புண்டு என்பதால் உடல் நலனில் அக்கறை தேவை. மகிழ்ச்சி அதிகரிக்க மகேசனை வணங்குங்கள்.

கடகம்

உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இந்த கால கட்டத்தில் நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத செலவீனங்களினால் பொருளாதாரம் சற்று பலவீனமடையும் துர்கா தேவியை செவ்வாய் கிழமை ராகு காலத்தில் வணங்கவும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர்ப்புகள் வலுக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்க.

கன்னி

உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உயர்வு கிடைக்கும். சுமையும் அதிகரிக்கும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

துலாம்

உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பணவரவு அதிகரிப்பதால் பொருளாதாரம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும்.

விருச்சிகம்

இதுநாள் வரை உங்கள் ராசிக்குள் இருந்த ராசிநாதன் செவ்வாய், இன்று முதல் ராசிக்கு 2வது வீட்டில் குடியேறியுள்ளார். வீட்டில் மனைவியுடன் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளதாகல் கவனமாக இருக்கவும். சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்து நல்லது.

தனுசு

சனிபகவான் ஏற்கனவே உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார். இன்று முதல் உங்கள் ராசியில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். கோபம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம். மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள். அதேசமயம் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. மனைவியுடன் சண்டை வரும் என்பதால் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம். மகேஷ்வரியை அரளி பூ கொண்டு அர்ச்சனை செய்து வணங்கவும்.

மகரம்

ராசிக்கு 12வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார் . குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன ஊடல்கள் வர வாய்ப்பு உள்ளது. மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கூடும். வயிற்றில் உடல் உபாதைகள் ஏற்படும். 12ல் சனியோடு செவ்வாய் இருக்க உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெட வாய்ப்பு உள்ளது. விபத்தில் காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால்,ஜாக்கிரதையாக வண்டி வாகனம் ஒட்டவும். செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

கும்பம்

இன்று முதல் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய். லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரலாம். மே மாதம் வரை யோகமான காலம்தான்.

மீனம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். இன்று முதல் உங்களுக்கு பொறுப்புகள் கூடும். பிரச்சினைகளை விட்டு தள்ளியே நில்லுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிலபிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

Leave a Reply