மேடையில் கண்ணீர் விட்டு அழுத சிம்பு…

சினிமா, முக்கிய செய்திகள்

நடிகர் சிம்புவை பற்றி நல்ல விஷயங்களைச் சொல்பவர்களைத் தாண்டி குறை கூறுபவர்களே அதிகம். படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார், இயக்குனர் சொல்வதைச் செய்ய மாட்டார் என நிறைய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வருகிறது

தற்போது சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் ’செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சிம்பு, படப்பிடிப்பில் ஆர்வத்துடன் நேரத்துக்கு முன் கூட்டியே ரெடியாகி நடிக்கத் தயாராகி விடுகிறாராம்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் 6 சீசனில் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்த எராளமான ரசிகர்கள் சந்தோஷத்தில் கொண்டாடியுள்ளார். அப்போது அவர், தன்னுடைய ரசிகர்களிடம் ’என்னை பற்றி நிறைய பேர் தவறாக கூறியே கேட்டுவிட்டேன்’.

’திடீரென்று நீங்கள் நல்லது சொல்லும் போது கேட்பது தாங்க முடியவில்லை’ என அனைவரின் முன்பும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால ரசிகர்களும் அழுது அவருக்கு ஆறுதலாக இருப்போம் என்று உற்சாகபடுத்தியுள்ளனர்.

Leave a Reply