தூக்கு போடுவது போல நடித்து, நிஜமாகவே தூக்கில் தொங்கிய 13 வயது மாணவி

பிரித்தானியா

பிரித்தானியாவில் 13 வயது மாணவி கடந்தாண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதற்கான காரணம் இன்னும் தெரியாமல் உள்ளது.

Sandbach நகரை சேர்ந்தவர் லில்லி மே (13). பள்ளிக்கூட மாணவியான இவர் கடந்தாண்டு மே மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லில்லி தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் தோழிகளுடன் சேர்ந்து பள்ளியில் ஒரு குறும்புத்தனமான வீடியோவை எடுத்துள்ளார்.

அதில் பள்ளி கழிப்பறையில் தூக்கிட்டு கொள்வது போல லில்லி நடிக்க அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

இதன் பின்னரே நிஜமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறப்புக்கான காரணத்தை பொலிசாரால் இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

ஆனால் லில்லியின் வீட்டு அறையில் ஒரு புத்தகம் மற்றும் ஐபேடை பொலிசார் கைப்பற்றினார்கள்.

அதில், இறந்து விடு மற்றும் தற்கொலை செய்து கொள் என எழுதப்பட்டிருந்தது.

ஆனால் லில்லி ஏன் அப்படி எழுதினார் என தெரியவில்லை.

இது குறித்து பேசிய லில்லி படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் லீ, லில்லி பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள மாட்டார்.

சமூகவலைதளங்களில் அவளுக்கு பிரச்சனை இருந்துள்ளது, அங்கு அவள் எதாவது பயமுறுத்துதல் அல்லது கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கலாம் என கூறியுள்ளார்.

ஆனால் பொலிசார் இது சம்மந்தமாக விசாரித்தும் எந்தவொரு ஆதாரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

லில்லியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கிட்டு கொண்டதால் தான் இறந்தார் என்பது மட்டும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply