பட்டப்பகலில் கல்லூரி வாசலில் மாணவி படுகொலை!

இந்தியா

சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் மதுரவாயலை சேர்ந்த அஸ்வினி எனும் மாணவி B.com படித்து வந்துள்ளார்.

இன்று வகுப்பு முடிந்து வீடு திரும்பிய அவரை, கல்லூரியின் வாசலிலேயே அழகேசன் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அஸ்வினியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கத்தியால் குத்திய அழகேசனை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காரணம் என்ன?

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, அழகேசனும் அதே பகுதியை சேர்ந்தவர் தான்.

துரத்தி துரத்தி காதல் டார்ச்சர் கொடுத்த அழகேசனை, அஸ்வினிக்கு பிடிக்கவில்லை, பலமுறை துன்புறுத்தியதால் மதுரவாயல் பொலிசிடம் புகார் அளித்தார்.

இதன்பேரில் அழகேசனை பொலிசார் கைது செய்தனர், இதற்கிடையே ஜாபர்கான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த அழகேசன், அஸ்வினி மீதிருந்த ஆத்திரத்தில் படுகொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்துள்ள பொலிசார் அழகேசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி வாசலில் உள்ள ரகசிய கண்காணிப்பு கமெராவையும் பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அஸ்வினியின் தோழிகளிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply