சமூக வலைத்தளங்கள் எதிர்வரும் 2 தினங்களுக்குள் வழமைக்குத் திரும்பும் !

இலங்கை, முக்கிய செய்திகள்

கண்டி – திகனவில் ஏற்பட்ட மோதலை அடுத்து தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வழமைக்குத் திரும்பும் என தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இணையத்தளத்தில் பிரவேசிப்பதற்கான முகவரிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் Whatsapp செயற்பட்டு வரும் நிலையில்,
நாளைய தினத்திற்குள் Viber ஐயும் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply