ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது தங்கை மவுனம் காப்பது ஏன்? கணவர்

இந்தியா

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது தங்கை ஸ்ரீலதா மவுனம் காப்பது தொடர்பாக அவரின் கணவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.

அவரின் மறைவிற்கு இந்தியா முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் உச்ச நட்சத்திரங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா மட்டும் யாரையும் சந்திக்காமல், கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்.

இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் சஞ்சய் ராமசாமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “எனக்கும் ஸ்ரீலதாவுக்கும் திருமணம் முடிந்து 28 ஆண்டுகள் ஆகின்றது. துயரமான இந்த நேரத்தில் எங்கள் மொத்த குடும்பமும் போனி கபூருக்கு ஆதரவாக உள்ளது. என் மனைவி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று சில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

தங்கள் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அமைதியாக இல்லாமல் சுவர் மீது ஏறி கத்திக் கொண்டா இருக்க முடியும். நாங்கள் பப்ளிசிட்டி தேடாமல் அமைதியாக இருப்பதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.” என காட்டமாக கூறியுள்ளார்.

Leave a Reply