பொது இடத்தில் தனக்கு பாலியல் தொல்லை: தில் வீடியோ வெளியிட்ட சின்மயி

சினிமா, முக்கிய செய்திகள்

பொது இடத்தில் தன்னை யாரோ தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் பெண்களை தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுக்கும் கயவர்கள் திருந்திய பாடில்லை. பாடகி சின்மயி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் அவரை யாரோ தகாத இடத்தில் தொட்டுள்ளார்.

இதை அவர் துணிச்சலாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

சின்மயி தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியதை பார்த்த பலர் தங்களுக்கும் அந்த கொடுமை நடந்ததாக அவருக்கு மெசேஜ் செய்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் குடும்பத்தாரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது அது பற்றி வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். சொன்னால் நம்புவார்களா என்ற சந்தேகம் உள்ளது என்கிறார் சின்மயி.

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் ஈவ் டீஸிங் நடந்தால் அதை வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்களோ, வேலைக்கு போக வேண்டாம் என்று கூறிவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அதனாலேயே பலர் வெளியே சொல்வது இல்லை என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் பெரும்பாலும் குடும்பத்துக்கு தெரிந்தவராக இருப்பார்கள். சொந்த வீட்டில் இந்த கொடுமை நடக்கும். அங்கிள், தாத்தா, கசின், டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர் ஆகியோர் தான் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார் சின்மயி.

பெண் குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. அது பெரும்பாலும் வீட்டில் தான் நடக்கிறது. கோவில்களில் கூட பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது என்று சின்மயி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து சின்மயி பேசிய வீடியோ இது தான்.

Leave a Reply