மான் நடிகையின் காதல், திருமணம் என்னாச்சு?: அவ்ளோ தானா?

கிசு கிசு

மான் நடிகையின் திருமணம் என்னாச்சு என்ற பேச்சு கிளம்பியுள்ளது. சின்னத்திரை சீரியல் மூலம் மிகவும் பிரபலமான அந்த நடிகை வெளிநாட்டில் இருக்கும் காதலரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகப் போவதாகக் கூறினார். இந்த காரணத்தால் தொலைக்காட்சி தொடரில் இருந்தும் விலகினார்.

காதலரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கிளம்பிய அம்மணி தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும் புதிய படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகைக்கு காதலர் இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அம்மணியோ நான் இப்போதைக்கு கல்யாணம் செய்து கொண்டு கிளம்பிவிட மாட்டேன் என்று உறுதி அளிக்கிறார்.

திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறிய நடிகை தற்போது அப்படி ஒரு விஷயம் உடனே நடக்காது என்று வாக்குறுதி அளிப்பதை பார்த்து அவருக்கும், காதலருக்கும் இடையே பிரச்சனையோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

பெரிய திரையில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்டு காதலரை தள்ளி வைக்கிறாரோ நடிகை. இல்லை காதல் முறிந்ததால் தான் நடிக்க வந்தாரா என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply