சாய் பல்லவிக்கும், திருமணமான என் மகனுக்கும் தொடர்பா?

சினிமா

சாய் பல்லவிக்கும், திருமணமான நடிகர் ரவி தேஜாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது என்ற தகவல் குறித்து அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமான நடிகையாக உள்ளார். ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சாய் பல்லவி பற்றி ஒரு தகவல் தீயாக பரவியது

சாய் பல்லவியும், நடிகரும், ஆந்திரா கல்வித்துறை அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் ராவின் மகனுமான ரவி தேஜாவும் காதலிப்பதாக பேசப்பட்டது. இருவரும் ஒரு படத்திலும் சேர்ந்து நடிக்காத நிலையில் இந்த தகவல் தீயாக பரவியது.

சாய் பல்லவியும், என் மகனும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆதாரம் இல்லாமல் இது போன்ற வதந்திகளை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் ஸ்ரீனிவாஸ் ராவ் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக வதந்திகளை நான் கண்டுகொள்வது இல்லை. ஆனால் இது இரண்டு பேரின் வாழ்க்கை பற்றியது. என் மகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி இப்படி வதந்தியை கிளப்புகிறார்களோ என்கிறார் ஸ்ரீனிவாஸ் ராவ்.

ரவி தேஜா நடித்த முதல் படம் ஜெயதேவ். ஜெயந்த் சி பரஞ்சி இயக்கிய ஜெயதேவ் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ரவி தேஜாவும், சாய் பல்லவியும் இதுவரை சந்தித்து பேசியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply