விரிவான செய்திகள்

சமந்தா, அமலா பாலை தகர்க்க வரும் 'தடகா' தமன்னாவின் கவர்ச்சி !!

05-May-2013 அன்று பிரசுரிக்கப்பட்டது

தெலுங்கு திரையுலகில் தமன்னாவின் தாராளத்தைப் பார்த்து சமந்தா, அமலா பால் உள்ளிட்டோர் ஆடிப் போயுள்ளார்களாம். தமிழில் நடிக்கும் பல நடிகைகள் தெலுங்கிலும் நடிக்கிறார்கள். தமிழில் நல்ல பிள்ளையாக நடித்துவிட்டு ஆந்திரா பக்கம் போய் அதிரடி கவர்ச்சியில் குதிப்பார்கள். அது ஏன் என்றே தெரியவில்லை. ஏதாவது ஒரு நடிகை இவ்வாறு செய்யவில்லை, பெரும்பாலான நடிகைகள் தமிழில் கவர்ச்சிக்கு ஒரு லிமிட் தெலுங்கில் ஒரு லிமிட் என்று வைத்துள்ளனர். இந்த கவர்ச்சிப் போட்டியில் தமன்னா ஆந்திர திரையுலக நடிகைகளை கலங்க வைத்துள்ளாராம். 
 
வேட்டை ரீமேக் 
 
மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்த வேட்டை படம் தெலுங்கில் தடகா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் சமீரா, அமலா பால் கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.
 
 
ஓவர் கவர்ச்சி 
 
தடகா படத்தின் ஸ்டில்கள் அண்மையில் வெளியாகின. அதில் தமன்னா காட்டியுள்ள கவர்ச்சியைப் பார்த்து தெலுங்கு திரையுலகமே அம்மாடி இவ்வளவு கவர்ச்சியா என்று வாயடைத்துப் போயுள்ளதாம்.
 
பெரிய டப்பு தடகா 
 
படத்திற்காக தமன்னாவுக்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளார் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.
 
கலக்கத்தில் சமந்தா 
 
தமன்னாவின் ஓவர் கவர்ச்சியைப் பார்த்து தெலுங்கு திரையுலகில் வலம் வரும் சமந்தா, அமலா பால் போன்றோர் கலக்கத்தில் உள்ளார்களாம்.
 

Related News
விளம்பரங்கள்